காணமல் போனோர் தொடர்பான விசாரணை – 2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணமல் போனோர் தொடர்பான விசாரணையானது கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15.08.2022) முதல் நாளை (16.08.2022)வரை இடம்பெற உள்ளது. இதில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், காணமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு அங்கத்தவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் காணமல் போனோரின் உறவினர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.

வாழைச்சேனை - பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ ஆதிவலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் - 2022
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆனிமாதம் 18ஆம் நாள் சனிக்கிழமை (02.07.2022)மாலை வாஸ்த்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகியதுடன் திங்கட்கிழமை (04.07.2022) பூர்வபட்சம் ஆனிப் பஞ்சமி திதியும் மக நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுப நாளி அஷ்டோத்திர சதநாம சங்காபிஷேகத்துடனும் தீர்த்த உற்சவத்துடனும் விழா இனிதே நிறைவு பெற்றது.






















சர்வதேச மகளிர் தினம் - 2022
(நாடும் தேசமும் உலகமும் அவளே)
2022ம் ஆண்டுக்கான பிரதேச மட்ட சர்வதேச மகளிர் தினமானது நாடும், தேசமும், உலகமும் அவளே எனும் தொனிப்பொருளின் கீழ் 2022.03.08 அன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன் அம்மணி தலைமையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வானது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 2.00 மணியளவில் மங்கள வாத்தியக் குழுவினரின் இசையுடன் அதிதிகள் வரவேற்புடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக சுகாதார வைத்திய அதிகாரி திரு.ஸ்டீவ் சஞ்சீவ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.R.கங்காதரன் - உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திரு.R.சசிக்குமார் - மேலதிக மாவட்டப் பதிவாளர், திரு.R.பாஸ்கரன் - நிருவாக உத்தியோகத்தர் மற்றும் திருமதி.தேவமனோஹரி பாஸ்கரன் – சமுர்த்தி முகாமையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒரு நிமிட இறைவணக்கத்தின் பின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.W.T. அரிசியா உம்மா அவர்களது வரவேற்புரையினைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையுரை, நாடகம், பேச்சு, பாடல், அதிதியுரை என சிறப்பாக பல நிகழ்வுகள் நடைபெற்று பங்குபற்றியவர்களுக்கான பரிசில்கள் வழங்கள் மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வுடன்; கலாச்சார உத்தியோகத்தர் திரு.மு.சிவகுமார் அவர்களின் நன்றியுரையுடன் மாலை 5 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
இதில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் 12 பெண்கள் விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் இளம் பெண் ஊடகவியலாளரான செல்வி.N.தாட்சாயினி அவர்களும் கௌரவிக்கப்பட்டார். கோவிட் 19 காலத்தில் அர்பணிப்புடன் சேவையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவமாதுக்கள், பற்சிகிச்சையாளர், ஏனைய உத்தியோகத்தர்களான பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று UNDP மற்றும் காவியா நிறுவனங்களின் அனுசரணையுடன் கிண்ணையடி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலே அடையாள அட்டை தொடர்பான முற்றிலும் இலவசமான நடமாடும் சேவையொன்று நடைபெற்றது.அடையாளஅட்டை விண்ணப்பத்திற்குத் தேவையான பிறப்புப்பதிவு, புகைப்படம், விண்ணப்பக்கொடுப்பனவு, முத்திரை, தபாலுறை, பொலிஸ் முறைப்பாடு என அனைத்தும் காலடியிலேயே இலவசமாக வழங்கப்பட்டது. இதிலே முதல் தடவையாக விண்ணப்பித்தல், பழைய அடையாள அட்டைக்குப் பதிலாக விண்ணப்பித்தல், தொலைந்துபோன அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் என 117 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வெற்றிகரமாக முடிவடைந்த இந்த நடமாடும் சேவையிற்கு அனுமதி மற்றும் பங்களிப்பு வழங்கிய பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காவியா நிறுவனம், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், கலைமகள் மகளிர் சங்கம், புகைப்பட கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஆயிரம் தரமான ஏற்றுமதி விவசாய நாற்று மேடைகளை நிறுவுவதற்கான தேசிய வேலைத்திட்டம்














