சர்வதேச மகளிர் தினம் - 2022
(நாடும் தேசமும் உலகமும் அவளே)

2022ம் ஆண்டுக்கான பிரதேச மட்ட சர்வதேச மகளிர் தினமானது நாடும், தேசமும், உலகமும் அவளே எனும் தொனிப்பொருளின் கீழ் 2022.03.08 அன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன் அம்மணி தலைமையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வானது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 2.00 மணியளவில் மங்கள வாத்தியக் குழுவினரின் இசையுடன் அதிதிகள் வரவேற்புடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக சுகாதார வைத்திய அதிகாரி திரு.ஸ்டீவ் சஞ்சீவ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.R.கங்காதரன் - உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திரு.R.சசிக்குமார் - மேலதிக மாவட்டப் பதிவாளர், திரு.R.பாஸ்கரன் - நிருவாக உத்தியோகத்தர் மற்றும் திருமதி.தேவமனோஹரி பாஸ்கரன் – சமுர்த்தி முகாமையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் ஒரு நிமிட இறைவணக்கத்தின் பின் வரவேற்பு நடனத்துடன்  ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.W.T. அரிசியா உம்மா அவர்களது வரவேற்புரையினைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையுரை, நாடகம், பேச்சு, பாடல், அதிதியுரை என சிறப்பாக பல நிகழ்வுகள் நடைபெற்று பங்குபற்றியவர்களுக்கான பரிசில்கள் வழங்கள் மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வுடன்; கலாச்சார உத்தியோகத்தர் திரு.மு.சிவகுமார் அவர்களின் நன்றியுரையுடன் மாலை 5 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
இதில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் 12 பெண்கள் விசேடமாக கௌரவிக்கப்பட்டதுடன் இளம் பெண் ஊடகவியலாளரான செல்வி.N.தாட்சாயினி அவர்களும் கௌரவிக்கப்பட்டார். கோவிட் 19 காலத்தில் அர்பணிப்புடன் சேவையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவமாதுக்கள், பற்சிகிச்சையாளர், ஏனைய உத்தியோகத்தர்களான பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.

 

WhatsApp Image 2022 03 10 at 12.47.00 PM1 WhatsApp Image 2022 03 10 at 12.47.00 PM3  WhatsApp Image 2022 03 10 at 12.47.00 PM  WhatsApp Image 2022 03 10 at 12.47.00 PM1  ffdff  ccccccccccccccccc  xx nnnnnn

Scroll To Top