பிரதேச இலக்கிய விழா-2022

 

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2022.10.13 (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி.அமலினி கார்த்தீபன் (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.R.சசிக்குமார் (மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.ஜோர்ச் (கணக்காளர்), திரு.R.பாஸ்கரன் (நிருவாக உத்தியோகத்தர்) திரு.சி.முருகவேல் (பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும்  அபிநயம் நடனக் கலை மன்றம்,பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம் ஆகிய மன்றங்களின் மூலம்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. திரு.கணபதிப்பிள்ளை யோகராசா அவர்கள் நடனம், நாடகக் கலைக்காகவும், திரு.சுரேந்திரன் டிலக்சன் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் இந் நிகழ்வுகள் யாவும் 11.30 மணியளவில் நிறைவுபெற்றன.

2  4  3  26  IMG 7535  16  914  15  13  11  10  7  6  23  25  24  22  20  17

Scroll To Top