கோறளைப்பற்று வாழைச்சேனை -  இரத்ததான நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி கேட்டதிற்கமைவாக 25.01.2023 அன்று  காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மனித உயிர்களைக்காக்கும் இம் மாண்புமிகு குருதிக்கொடை நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள்,கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் சமூக நலன்புரி அமைப்பு உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து தமது பங்களிப்பினை வழங்கும் முகமாக தமது பெறுமதி வாய்ந்த இரத்தத்தினை தானமாக வழங்கினர். அந்தவகையில் 64 குருதிகொடையாளிகளுக்கும் அதிகமானவர்கள்  தமது இரத்தத்தினை தானமாக வழங்கினர்.

ED  3  2  5

 

     

 

 

கோறளைப்பற்று வாழைச்சேனை-  பொங்கல் விழா-2023

தமிழர் தம்மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் அமையப்பெற்ற திருநாள் பொங்கல் விழாவாகும். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவானது   20.01.2023 அன்று காலை  8.30 மணியளவில் முறாவோடை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில்   பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடனும் முறாவோடை கிராமத்தின் சமூக,சமய அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடனும் வெகு விமர்சையாக  நடைபெற்றது.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகிய இவ் விழாவில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள்,அறநெறி பாடசாலை மாணவர்கள்  மற்றும்  கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முகமாக பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் நாட்டுப்புற நடனம்,மயில் நடனம்,காவடி, கும்மி,கோலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பல கலைநிகழ்வுகளும்  அரிகி வரும் தமிழர் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும்  வீர விளையாட்டுக்கலான போர்த் தேங்காய் உடைத்தல்,கரும்பு உடைத்தல் போன்ற பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

தமிழர்கள் இயற்கையை நேசிக்கும் வல்லமை கொண்டவர்கள் எனும் அறத்தினை வெளிப்படுத்தும் முகமாக சூரிய வழிபாடும் இவ்விழாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதல்களையும் வழங்கினார்.

32  01  02  21    22  23  24  03  17  19  26  20  31  05  07  ed  ed1  ed4   08  10  ed2  ed3  27  28  29  30

 

கோறளைப்பற்று வாழைச்சேனை- 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது பிரதேச செயலகத்தில் இன்று (02.01.2023)  காலை 9  மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.R.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

2023 ஆம் ஆண்டின் முதல் நாளினை  வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும்  பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால்  தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.இப் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும்,நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். இறுதியாக, பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

IMG 0151  IMG 0137  IMG 0134  IMG 0132  IMG 0115  IMG 0124  IMG 0145  IMG 0200  IMG 0192  IMG 0191  IMG 0189  IMG 0206  IMG 0199IMG 0171

 

கோறளைப்பற்று பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும், சேவைநலன் பாராட்டு விழாவும்-2022

                                         

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவானது கடந்த 07.01.2023 அன்று நாசிவன்தீவு தனியார் வாடிவீட்டில் காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களும்,ஓய்வு பெற்றுச்சென்றவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்தவகையில்,இடமாற்றம் பெற்றுச் சென்று தற்போது வாகரை பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமைபுரியும் திருமதி.சந்திரகலா ஜெயந்திரா, சமுர்த்தி முகாமையாளர் திரு.நல்லரெத்தினம் விஜிதரன், திருமதி. H.M.பாத்திமா மிஸ்னா, திருமதி.WT.அரிசியாஉம்மா, திருமதி.பவளகாந்தினி  இலங்கேஸ்வரன், திரு.கந்தையா இதயராஜா, ஜனாப்.ஆபுபக்கர் நாஸர், ஓய்வு பெற்று சென்ற யமுனா சிவலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு அவர்களுக்கான நினைவுச் சின்னங்களுடன் அவர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதேச செயலாளரின் உரையானது இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்று சென்றவர்களின் மக்கள் சேவையினை பாராட்டும் முகமகவும்,அவர்களை மேலும் ஊக்குவிக்கும் முகமகவும் அமையப்பெற்றது. மேலும் அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளும்,வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இந்நிகழ்வினை அலங்கரிப்பவனாக அமையப்பெற்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

10  11  20  17  18  19  6  5  15  16  4  7  3  12  14  9  01  2 

 

கோறளைப்பற்று வாழைச்சேனை- ஒளி விழா 2022

 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒளி விழாவானது 20.12.2022 ஆம் திகதி காலை 10.30  மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட்பணி.S.இக்னேசியஸ் அடிகளார், அருட்பணி. K.ஸ்டீபன் நிஷாந்த அடிகளார், வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.R.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இயேசு பாலன் பிறந்த தினத்தை நினைவூட்டும் வகையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பல நடனங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

 

1  1 copy    WhatsApp Image 2022 12 21 at 00.50.381  WhatsApp Image 2022 12 21 at 00.50.35  12  WhatsApp Image 2022 12 21 at 00.50.34  WhatsApp Image 2022 12 21 at 00.50.331  WhatsApp Image 2022 12 21 at 00.50.321  WhatsApp Image 2022 12 21 at 00.50.33  WhatsApp Image 2022 12 21 at 00.50.31  WhatsApp Image 2022 12 21 at 00.50.30  WhatsApp Image 2022 12 21 at 00.50.21  WhatsApp Image 2022 12 21 at 00.50.21  WhatsApp Image 2022 12 21 at 00.50.091  WhatsApp Image 2022 12 21 at 00.50.072  WhatsApp Image 2022 12 21 at 00.50.061  WhatsApp Image 2022 12 21 at 00.50.071  WhatsApp Image 2022 12 21 at 00.50.07  dance  WhatsApp Image 2022 12 21 at 00.50.06  WhatsApp Image 2022 12 21 at 00.50.051  WhatsApp Image 2022 12 21 at 00.50.08  WhatsApp Image 2022 12 21 at 00.49.43  WhatsApp Image 2022 12 21 at 00.50.04  WhatsApp Image 2022 12 21 at 00.50.035  WhatsApp Image 2022 12 21 at 00.50.03  WhatsApp Image 2022 12 21 at 00.50.031  WhatsApp Image 2022 12 21 at 00.50.022  WhatsApp Image 2022 12 21 at 00.49.51  WhatsApp Image 2022 12 21 at 00.50.021  WhatsApp Image 2022 12 21 at 00.50.02  WhatsApp Image 2022 12 21 at 00.50.011      cris  WhatsApp Image 2022 12 21 at 00.49.36                       

 

 

 

Scroll To Top