கோறளைப்பற்று வாழைச்சேனை- 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது பிரதேச செயலகத்தில் இன்று (02.01.2023) காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.R.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2023 ஆம் ஆண்டின் முதல் நாளினை வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.இப் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும்,நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். இறுதியாக, பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.













