News & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயணத் தலம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - கோறளைப்பற்று வாழைச்சேனை
மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயணத் தலம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - கோறளைப்பற்று வாழைச்சேனை
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) காலை 8.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரை பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாசிக்குடா கடற்கரையில் இருந்து இரண்டு அணிகளாக பிரிந்து மேற்கூறப்பட்ட இடங்களை சுத்தம் செய்தனர். மேலும் இந் நிகழ்வானது பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலகர்கள், சுற்றுலா விடுதி ஊழியர்கள், கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள், மீனவர் சங்கத்தினர், இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உதவியாளர் ஆகியோரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் கடற்கரையோரங்களில் அதிகளவில் காணப்பட்ட பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது 13.02.2025 அன்று 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் கௌரவ க.பிரபு (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்) அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், கௌரவ இ.சிறிநாத் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள்,கௌரவ ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், கௌரவ எம்.எஸ் நலீம் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், திரு.ஜி.திலிப்குமார் (இணைப்பாளர்) அவர்கள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆர்.கங்காதரன் அவர்கள், பிரதேச செயலக கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் கடந்த வருடம் இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், Clean Srilanka வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றன.மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது இன்று (01.01.2025) காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளினை வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் “Clean Srilanka’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கு அமைவாக வளமான நாட்டையும் அழகான வாழ்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் செயன்முறையொன்றுக்கான அடிப்படையொன்றை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும், நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினார். மேலும் இவ்வருட இறுதியில் ஓய்வூதியம் பெற்றுசெல்பவர்களுக்கான கௌரவிப்பும், அவர்களது அலுவலக அனுபவ பகிர்வும் இடம்பெற்றது. இறுதியாக, நன்றியறிதலுடன் பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை - ஒளி விழா - 2024

















