News & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
சிரமதான நிகழ்வுகள்- கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
சிரமதான நிகழ்வுகள்- கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் Plastics and Polythene Free Zone என்ற தொனிப்பொருளின் கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கல்மடு கிராமசேவகர் பிரிவு, கல்குடா கிராமசேவகர் பிரிவின் வலவாடி கடற்கரைப் பிரதேசத்தில் முறையே 14.06.2023,15.06.2023 சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இச் சிரமதான நிகழ்வானது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர் (CCD) ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக, கரையோர மூல வள திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரின் பங்களிப்புடன் கல்மடு பிரதேசத்தில் கல்மடு மீனவர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடனும், கல்குடா பிரதேசத்தின் வலவாடி மீள்குடியேற்ற சிங்கள குடும்பங்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கமைவாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இழுவை இயந்திரம் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடதக்கவிடயமாகும்.

சிரமதான நிகழ்வு- கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
சிரமதான நிகழ்வு- கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் Plastics and Pholythene Free Zone என்ற தொனிப்பொருளின் கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின், நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவிலுள்ள முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் 12.06.2023 சிரமதானம் இடம்பெற்றது.
இச் சிரமதான நிகழ்வானது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர்(CCD) ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அற்புதன் , கரையோர மூல வள திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரின் பங்களிப்புடன் சமுர்த்தி பயனாளிகளைக் கொண்டு இடம்பெற்றது. இதற்கமைவாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இழுவை இயந்திரம் ஈடுபடுதப்பட்டதொடு,சிற்றூண்டி நாசிவன்தீவு தனலெட்சுமி ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் வழங்கியதோடு, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான Pholy bag நாசிவன்தீவில் அமைந்துள்ள Lanka Pholysack நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

“விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்”-கோறளைப்பற்று வாழைச்சேனை -2023
“விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்”- கோறளைப்பற்று வாழைச்சேனை - 2023
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 16.05.2023 அன்று காலை 9.00 மணிமுதல் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நாடு பூராகவும் மிகவும் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடனான இச் சிரமதான நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களது பங்களிப்பினை வழங்கினர். மேலும் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இச் சிரமதான வேலைத்திட்டமானது கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.
















