News & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
கோறளைப்பற்று வாழைச்சேனை - வாணி விழா - 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை - வாணி விழா - 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் வாணி விழாவானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 24.10.2023 அன்று 9.30 மணியளவில் தொடங்கியது. இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
“பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் - கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
“பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் - கோறளைப்பற்று வாழைச்சேனை-2023
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ’’ தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் இன்று (02.10.2023) பொது இடங்களில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று வாழைச்சேனை-காணாமல் போனோர் தொடர்பான விசாரணை – 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை-காணாமல் போனோர் தொடர்பான விசாரணை – 2023
மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கமைவாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணையானது கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டளுக்கமைவாக, உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் கோறளைப்பற்று பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04.09.2023) இடம்பெற்றது. இதில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு அங்கத்தவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரால் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















