News & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-01) - 2022
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-01) - 2022
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் இறுதி நாள் விழாவானது 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பல நிகழ்சிகள் இடம்பெற்றது. மேலும் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களும் சிங்கள கலாசார ஆடையணிந்து இந்நிகழ்வில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
கடந்த 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று UNDP மற்றும்
கடந்த 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று UNDP மற்றும் காவியா நிறுவனங்களின் அனுசரணையுடன் கிண்ணையடி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலே அடையாள அட்டை தொடர்பான முற்றிலும் இலவசமான நடமாடும் சேவையொன்று நடைபெற்றது.அடையாளஅட்டை விண்ணப்பத்திற்குத் தேவையான பிறப்புப்பதிவு, புகைப்படம், விண்ணப்பக்கொடுப்பனவு, முத்திரை, தபாலுறை, பொலிஸ் முறைப்பாடு என அனைத்தும் காலடியிலேயே இலவசமாக வழங்கப்பட்டது. இதிலே முதல் தடவையாக விண்ணப்பித்தல், பழைய அடையாள அட்டைக்குப் பதிலாக விண்ணப்பித்தல், தொலைந்துபோன அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் என 117 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வெற்றிகரமாக முடிவடைந்த இந்த நடமாடும் சேவையிற்கு அனுமதி மற்றும் பங்களிப்பு வழங்கிய பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காவியா நிறுவனம், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், கலைமகள் மகளிர் சங்கம், புகைப்பட கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தைப் பொங்கல் விழா 2022
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழாவானது இன்று 19.01.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளாகத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .
பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 கிராம சேவக பிரிவுகளும் மற்றும் பிரதேச செயலகமும் உள்ளடங்கலாக 13 பொங்கல் பானைகளில் பல்வேறு விதமான சுவையான பொங்கல்கள் இடம் பெற்றதுடன், அறநெறி பாடசாலைகள் மற்றும் கலைக் குழுக்களின் பாரம்பரிய கலை இலக்கிய நிகழ்வுகளும் பொங்கல் விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .இன் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு R. கங்காதரன் , கணக்காளர் திரு S.ரூபாகரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு. R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. R சசிகுமார் , சமூர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .B தேவமனோகரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


















