இன்று காலை 9.00 மணிக்கு எமது கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேசியக்கொடி ஏற்றல் மற்றும் நேர்மை சத்தியப்பிரமாண உறுதியுரை 2026 நிகழ்வின் சில பதிவுகள்.

   

   

எமது புதிய பிரதேச செயலாளராக 01.07.2026 அன்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு ஐயா அவர்களின் வரவேற்பு நிகழ்வுகளின் சில பதிவுகள்.

 735377115_1034019842903096_2774059228731354275_n.jpg                                       

 

   735377115_1034019842903096_2774059228731354275_n.jpg

 

 

 

 

 

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட Citizen Mirror பிரதேச உற்பத்தித்திறன் சுட்டி 1.0 எனும் போட்டியில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் AAA எனும் தரச் சான்றிதழினை பெற்றுள்ளது.
மாவட்ட ரீதியாக பார்க்கும் போது 4ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியாக 16வது இடத்தினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு பிரதேசசெயலத்தில் இயங்கும் பிரதான கிளைகள் மற்றும் சகல வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட இரு கருத்திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமை முக்கிய விடயமாகும்.
இவ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அம்மணிக்கும், முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்சி சசிகுமார் அம்மணிக்கும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மேலதிக மாவட்ட பதிவாளர் உட்பட அனைத்து அலகு தலைவர்கள் கிளை அலகு உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சமூர்த்தி பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற எமது மதிப்பிற்குரியது பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அம்மணி அவர்களின் 30.06.2026 அன்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுகளின் சில பதிவுகள்.

         

 

           

          

கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்
கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது 12.06.2026 அன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு A.றொபர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு A.S சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு R.கங்காதரன், கணக்காளர் திருமதி T.சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி P.ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஐனவரி மாதம் தொடக்கம் 2026 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவுவிபரங்கள் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் அஸ்வெசும நிதியுதவி திட்டம், சமுர்த்தி முதலீடுகள், சமூக நலத்திட்ட கொடுப்பனவுகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுப் பொதிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தனித்தனி மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கணக்காய்வு கேள்விகளுக்கு காலவரையறைக்குள் பதிலளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், உள்கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டமானது பி.ப 1.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
 
Scroll To Top