**சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்-2026**
எமது கோறளைப்பற்று பிரதேசசெயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டமானது (06.08.2026) அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.S.ராஜ்பாபு ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்திப்பணிப்பாளர் திருமதி J.திருச்செல்வம் அம்மணி அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அழைப்பு அதிதிகளாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக ரண்விமன வீடு கையளித்தலும் மற்றும் அவர்களுக்கு ரூபா 10,000.00 பெறுமதியான உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அதிதிகளை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வரவேற்புரையானது தலைமை முகாமையாளரினாலும் தொடர்ந்து தலைமையுரையானது பிரதேச செயலாளரினாலும் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிப்தொர மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றது. தொழில்பயிற்சி மாணவர்களுக்கான பயிற்சிநெறியை தொடர்வதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. சவிபல கடன் வழங்கல், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், கொடி விற்பனை (2025, 2026) அதிக பணம் சேகரித்த சமுர்த்தி உத்தியோகத்தரகள், சமூதாய அமைப்புத்தலைவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கொடி விற்பனை (2023, 2024) நிதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக முகாமைப்பணிப்பாளரின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

















