கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் இரண்டாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
 
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (05.06.2026) அன்று பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Dr.இளையதம்பி சிறிநாத், பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், பிரதிதத்திட்டமிடல் பணிப்பாளர் திரு ராஜரெட்ணம் கங்காதரன், திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,அலுவலக உத்தியோகத்தர்கள்மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
 
மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையானது பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையானது ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் கூட்டறிக்கையானது அங்கிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு திணைக்களங்களிலும் தற்போது கலந்துரையாடப்பபடவேண்டிய விடயங்கள் சம்மந்தமான கலந்துரையாடப்பட்டன. எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டன. இக்கூட்டமானது மாலை 5.15 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
 
  
முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது-2026
 
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது 11.03.2026 இன்று காலை 10.00 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு A.றொபர்ட், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு A.S சசிகரன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு R.கங்காதரன், கணக்காளர் திருமதி T.சசிகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி P.ஜெயக்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் 2026 பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு திணைக்கள ரீதியான அடைவுகளின் செயல்திறன், நிதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், செலவின முன்னேற்றம் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும் பிரதேச செயலகத்தினுள் உள்ளககட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தவும் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
 
 

தைப்பொங்கல் விழா-2026

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா 05.02.2026 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும் கலை மன்ற மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வு மற்றும் ஊர்வல நிகழ்வுடன் புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கோராவெளி கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கோறளைப்பற்று பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் கோறளைப்பற்று பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடனும் புதுக்குடியிருப்பு கிராமத்தின் சமய,சமூக அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடனும், கலை நிகழ்வுகளுடனும் கோலாகலமாக இடம்பெற்றது.

 

            

  

  

  

 

    

   

 

 

 

**“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகம்**
கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு இன்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனுடைய ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ. திருச்செல்வம் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் க.புவினராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில்
“விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.
போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டன.
எமது நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
**78வது சுதந்திர தின நிகழ்வுகள்**
78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் இன்று (04.02.2026) சுதந்திர தின நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வுகள் இடம் பெற்றன.
 
 
 
Scroll To Top