கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-01) - 2022
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் இறுதி நாள் விழாவானது 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பல நிகழ்சிகள் இடம்பெற்றது. மேலும் இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களும் சிங்கள கலாசார ஆடையணிந்து இந்நிகழ்வில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
மட்டு முயற்சியாண்மை கோறளைப்பற்று பிரதேச மட்ட கண்காட்சி- 2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.அமலினி கார்த்தீபன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் “மட்டு முயற்சியாண்மை-2022” - உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியானது 23.11.2022 (புதன்கிழமை) மு.ப 9.00 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் திரு.R.கங்காதரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.R.பாஸ்கரன் (நிருவாக உத்தியோகத்தர்), திருமதி K.தேவமனோகரி (சமுர்த்தி தலைமையக முகாமையாளர்), திரு.S.ஜெயசேகர் (சமூகசேவை உத்தியோகத்தர்), திரு.T.நிலோசன் (மேற்பார்வை உத்தியோகத்தர் - சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு), திரு.S.அகிலகுமார் (சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்), திருமதி.K.சாலினி (சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந் நிகழ்வு அமையப்பெற்றது வரவேற்கத்தக்கதாகும்.

உலக சிறுவர் தினம் , முதியோர் வார நிகழ்வு - 2022..
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 11.10.2022 பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உலக சிறுவர் தினம், முதியோர் வார நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறுவர்களும் முதியவர்களும் பிரதேச செயலகத்தினால் அதிதிகளாக வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் நாடகம், பட்டிமன்றம்,நடனம்,முதியவர்களின் நடனம்,வறிய பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் 2021,2022 உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வுகள் அனைத்தும் “சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்”, “மாறிவரும் உலகில் மீள் உய்கை மிக்க மூத்த பிரஜைகள்” ஆகிய தலைப்புக்களில் அரங்கேற்றப்பட்டன. இறுதியாக 6.30 மணியளவில் நன்றியுரையுடன் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன.
பிரதேச இலக்கிய விழா-2022
கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2022.10.13 (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி.அமலினி கார்த்தீபன் (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.R.சசிக்குமார் (மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.ஜோர்ச் (கணக்காளர்), திரு.R.பாஸ்கரன் (நிருவாக உத்தியோகத்தர்) திரு.சி.முருகவேல் (பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அபிநயம் நடனக் கலை மன்றம்,பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம் ஆகிய மன்றங்களின் மூலம் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. திரு.கணபதிப்பிள்ளை யோகராசா அவர்கள் நடனம், நாடகக் கலைக்காகவும், திரு.சுரேந்திரன் டிலக்சன் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் இந் நிகழ்வுகள் யாவும் 11.30 மணியளவில் நிறைவுபெற்றன.


கோறளைப்பற்று வாழைச்சேனை - தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 12/10/2022 (புதன் கிழமை) காலை 8.30 மணி தொடக்கம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்கருதி FPA- SUWESEWA CENTER(Batticaloa)-சுகாதார சேவை நிலைய அனுசரணையுடனும், வாழைச்சேனை- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடனும், சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி திரு.DR.ஸ்டீவ் சஞ்சீவ் அவர்களின் தலைமையில் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை இடம்பெற்றது.மேலும் FPA-SUWESEWA CENTER(Batticaloa)-சுகாதார சேவை நிலைய குடும்பத்திட்டமிடல் அலகுடன், வாழைச்சேனை- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களும் இணைந்து குடும்பத்திட்டமிடல் தொடர்பான ஆலோசனைகளை வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கினர். இச் சேவைகள் அனைத்தும் இலவசமான முறையிலேயே வழங்கப்பட்டது.











