உலக சிறுவர் தினம் , முதியோர் வார நிகழ்வு - 2022..

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 11.10.2022  பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உலக சிறுவர் தினம், முதியோர் வார நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறுவர்களும் முதியவர்களும் பிரதேச செயலகத்தினால் அதிதிகளாக வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் நாடகம், பட்டிமன்றம்,நடனம்,முதியவர்களின் நடனம்,வறிய பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் 2021,2022  உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வுகள் அனைத்தும் “சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்”, “மாறிவரும் உலகில் மீள் உய்கை மிக்க மூத்த பிரஜைகள்” ஆகிய தலைப்புக்களில்  அரங்கேற்றப்பட்டன. இறுதியாக 6.30 மணியளவில் நன்றியுரையுடன் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன.

IMG 20221010 WA0002  IMG 20221010 WA0001  IMG 7167  IMG 7170  IMG 7178  IMG 7188  IMG 7190  IMG 7192  IMG 7209  IMG 7229  IMG 7252  IMG 7259  IMG 7284  IMG 7293  IMG 7339  IMG 7412  IMG 7440  IMG 7492  IMG E7214  IMG E7265  IMG E7297     

 

 

Scroll To Top