இரண்டாம் காலாண்டுக்கான போதைப்பொருள் தடுப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழு, மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்-2025
கோறளைப்பற்றுப் பிரதேச செயலக இரண்டாம் காலாண்டுக்கான போதைப்பொருள் தடுப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழு, மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது 22.07.2025 அன்று காலை 09.30 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் துறைசார் விடயம் தொடர்பாக பிரதேசமட்டத்தில் கடமையாற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற தனியார்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என்போர் பங்குபற்றியிருந்ததுடன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்கள ரீதியாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த துறைகள் தொடர்பாக எதிர் நோக்கிய சவால்களும் அதற்காக கையாளப்பட வேண்டிய நுட்ப முறைகள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


கோறளைப்பற்று வாழைச்சேனை - தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை-2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 26/05/2025 (திங்கட் கிழமை) காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளரின் தலைமையில்,வாழைச்சேனை- ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடனும், DR.ருக்க்ஷாலினி அவர்களின் பங்களிப்புடனும் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை இடம்பெற்றது. வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இச் சேவைகள் அனைத்தும் இலவசமான முறையிலேயே வழங்கப்பட்டது. இப் பரிசோதனையில் பிரதேச செயலகத்தின் 50 மேற்பட்ட உத்தியோகத்தர்கள் தங்களை பரிசோதனை செய்துகொண்டனர்.

கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு
கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் வலையமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மகளிர் தினமானது பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 12.03.2025 காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திருமதி. தயானி சசிகுமார், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி. திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர் திருமதி.க.தேவமனோகரி அவர்கள், GIZ ஆலோசகர், ESCO நிறுவன பணிப்பாளர்,பெண்கள் வலையமைப்பின் வளவாளர், வாழைச்சேனை சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்,டில்மா அறக்கட்டளை நிதிய முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாடகம், நடனம், பாடல் போன்றவை இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வானது GIZ,ESCO ஆகியவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



கோறளைப்பற்றுப் பிரதேச செயலக முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் - 2025
கோறளைப்பற்றுப் பிரதேச செயலக முதலாம் காலாண்டுக்கான போதைப்பொருள் தடுப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு, மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது இன்று (30.04.2025) காலை 09.30 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் துறைசார் விடயம் தொடர்பாக பிரதேசமட்டத்தில் கடமையாற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இவ் ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்கள ரீதியாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த துறைகள் தொடர்பாக எதிர் நோக்கிய சவால்களும் அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயணத் தலம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - கோறளைப்பற்று வாழைச்சேனை
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) காலை 8.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரை பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாசிக்குடா கடற்கரையில் இருந்து இரண்டு அணிகளாக பிரிந்து மேற்கூறப்பட்ட இடங்களை சுத்தம் செய்தனர். மேலும் இந் நிகழ்வானது பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலகர்கள், சுற்றுலா விடுதி ஊழியர்கள், கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள், மீனவர் சங்கத்தினர், இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உதவியாளர் ஆகியோரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் கடற்கரையோரங்களில் அதிகளவில் காணப்பட்ட பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
















