கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது 13.02.2025 அன்று 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் கௌரவ க.பிரபு (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்) அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், கௌரவ இ.சிறிநாத் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள்,கௌரவ ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், கௌரவ எம்.எஸ் நலீம் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், திரு.ஜி.திலிப்குமார் (இணைப்பாளர்) அவர்கள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆர்.கங்காதரன் அவர்கள், பிரதேச செயலக கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் கடந்த வருடம் இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், Clean Srilanka வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றன.மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

கோறளைப்பற்று வாழைச்சேனை - மாட்டு வண்டி பவனியோடு நடைபெற்ற தைப்பொங்கல் விழா -2025
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாசிவன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள், கிராமமட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழாவானது 04.02.2025 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு நாசிவன்தீவு பொது மைதானத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி. புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நாசிவன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் சங்கங்கள்,விளையாட்டு கழகத்தினர், ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கலாசார பண்பாட்டு ஊர்வலமும் மாட்டு வண்டி பவனியும் நாசிவன்தீவு ஸ்ரீ கணேஷர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் நாசிவன்தீவு கோபாலசிங்கம் வயற்காணியில் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை செய்யப்பட்டு நாசிவன்தீவு பொது மைதானத்தில் பொங்கல் நிகழ்வானது ஆரம்பமானது. கலாசார பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் இடத்தை சென்றடைந்ததும் பிரதான பொங்கல் பானையில் புத்தரிசியிட்டு பிரதேச செயலக பிரிவில் உள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களால் விதம் விதமான சுவையுடைய பொங்கல் பானைகள் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக நன்றியறிதலுடன் இந்நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது இன்று (01.01.2025) காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளினை வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் “Clean Srilanka’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கு அமைவாக வளமான நாட்டையும் அழகான வாழ்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் செயன்முறையொன்றுக்கான அடிப்படையொன்றை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும், நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினார். மேலும் இவ்வருட இறுதியில் ஓய்வூதியம் பெற்றுசெல்பவர்களுக்கான கௌரவிப்பும், அவர்களது அலுவலக அனுபவ பகிர்வும் இடம்பெற்றது. இறுதியாக, நன்றியறிதலுடன் பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை- 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 04.02.2025 அன்று காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி. திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் சுதந்திர தின விசேட உரை இடம்பெற்றது. மேலும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.














