News & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
கோறளைப்பற்று வாழைச்சேனை- 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை- 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது பிரதேச செயலகத்தில் இன்று (01.01.2024) காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன், கணக்காளர் திரு.ஜே.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயக்குமார் புனிதநாயகி, மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி.புனிவதி ஆனந்தன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.கே.தேவமனோகரி மற்றும் அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் நாளினை வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.அதனைதொடர்ந்து பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் ‘’வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கும், தற்போதைய சர்வதேச போக்குக்கும் அமைவாக புதிய பொருளாதாரச் செயன்முறையொன்றுக்கான அடிப்படையொன்றை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினர்.மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டு முன்வைக்கப்படுகின்ற விடயங்களின் வாயிலாக மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும், நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினார். அலுவலக உத்தியோகத்தர்களின் சேவையினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டில் பலதரப்பட்டவிடயங்களை கருத்திற்கொண்டு சிறந்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரதேச செயலகத்தின் சிறுவர், பெண்கள் பிரிவினால் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் முகமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக, பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

கோறளைப்பற்று வாழைச்சேனை- ஒளி விழா 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை- ஒளி விழா 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒளி விழாவானது 20.12.2023 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட்பணி.டெரன்ஸ் றாகல் அடிகளார், அருட்பணி.ஜி. லக்க்ஷ்மனகாந்த் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன், கணக்காளர் திரு.ஜி.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயக்குமார் புனிதநாயகி, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இயேசு பாலன் பிறந்த தினத்தை நினைவூட்டும் வகையில் பாடசாலை மாணவர்களினால் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பல நடனங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
கோறளைப்பற்று வாழைச்சேனை- பிரதேச இலக்கிய விழா-2023
கோறளைப்பற்று வாழைச்சேனை- பிரதேச இலக்கிய விழா-2023
கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2023.12.01 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி. அமலினி கார்த்தீபன்- (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன்- (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.ஜோர்ச்-(கணக்காளர்), திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாக உத்தியோகத்தர்), திருமதி.புனிதவதி ஆனந்தன்-(மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.S.ரவிச்சந்திரன் (பதவி நிலை முகாமைத்துவ உத்தியோகத்தர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மூத்த கலைஞராக சபாபதி கந்தசாமி ஐயா அவர்களும், இளங் கலைஞராக திருமதி.கிருஷாந்த் விமலாதேவி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அபிநயம் நடனக் கலை மன்றம், பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம், வித்யாரணி கலைமன்றம் ஆகிய மன்றங்களின் மூலம் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாடல்,பேச்சு,கவிதை,கதை கூறல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக பலர் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். இறுதியில் கலைநிகழ்ச்சிகளை நடாத்திய மாணவச் செல்வங்களுக்கும், கலை மேம்பாட்டு சாதனையாளர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நன்றியுரையுடன் இந் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.
கோறளைப்பற்று வாழைச்சேனை - உலக சிறுவர் தினம் 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை - உலக சிறுவர் தினம் 2023
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 01.11.2023 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான “எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக உலக சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் (கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை) அவர்கள் கலந்து கொண்டார். மேலும் திரு.M.S.மதன் (சுகாதார வைத்திய அத்தியஸ்தர், ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை), திரு. S.M.L.R பண்டார (நிலைய பொறுப்பதிகாரி,பொலிஸ் நிலையம்,வாழைச்சேனை), திரு. S.நவநீதன்(செயலாளர் - கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபை) திரு. MM.அப்துல் றவுப் (நன்நடத்தை பொறுப்பதிகாரி, நன்நடத்தை அலுவலகம்,வாழைச்சேனை) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாகஉத்தியோகத்தர்) திருமதி.க.தேவமனோகரி (சமுர்த்தி தலைமை முகாமையாளர்), திரு.R.பிரேம்சந்திர (முகாமையாளர், இலங்கை வங்கி வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உலக தரிசனம் வாழைச்சேனை, ஹானியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகர் வாழைச்சேனை, செரி நிறுவனம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கோறளைப்பற்று வாழைச்சேனை அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு (கோறளைப்பற்று வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம், வீதி நாடகம் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தவிர,பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.மேலும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய வளர்நிலா சிறுவர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதியாக 12.00 மணியளவில் நன்றியுரையுடன் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.


















