கோறளைப்பற்று வாழைச்சேனை- பிரதேச இலக்கிய விழா-2023
கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2023.12.01 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி. அமலினி கார்த்தீபன்- (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன்- (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.ஜோர்ச்-(கணக்காளர்), திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாக உத்தியோகத்தர்), திருமதி.புனிதவதி ஆனந்தன்-(மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.S.ரவிச்சந்திரன் (பதவி நிலை முகாமைத்துவ உத்தியோகத்தர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மூத்த கலைஞராக சபாபதி கந்தசாமி ஐயா அவர்களும், இளங் கலைஞராக திருமதி.கிருஷாந்த் விமலாதேவி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அபிநயம் நடனக் கலை மன்றம், பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம், வித்யாரணி கலைமன்றம் ஆகிய மன்றங்களின் மூலம் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாடல்,பேச்சு,கவிதை,கதை கூறல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக பலர் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். இறுதியில் கலைநிகழ்ச்சிகளை நடாத்திய மாணவச் செல்வங்களுக்கும், கலை மேம்பாட்டு சாதனையாளர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நன்றியுரையுடன் இந் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.











