கோறளைப்பற்று  வாழைச்சேனை - உலக சிறுவர் தினம்   2023

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 01.11.2023  காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான “எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக உலக சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் (கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை) அவர்கள் கலந்து கொண்டார். மேலும் திரு.M.S.மதன் (சுகாதார வைத்திய அத்தியஸ்தர், ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை), திரு. S.M.L.R பண்டார (நிலைய பொறுப்பதிகாரி,பொலிஸ் நிலையம்,வாழைச்சேனை), திரு. S.நவநீதன்(செயலாளர் - கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபை) திரு. MM.அப்துல் றவுப் (நன்நடத்தை பொறுப்பதிகாரி, நன்நடத்தை அலுவலகம்,வாழைச்சேனை) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாகஉத்தியோகத்தர்) திருமதி.க.தேவமனோகரி (சமுர்த்தி தலைமை முகாமையாளர்), திரு.R.பிரேம்சந்திர (முகாமையாளர், இலங்கை வங்கி வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உலக தரிசனம் வாழைச்சேனை, ஹானியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகர் வாழைச்சேனை, செரி நிறுவனம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கோறளைப்பற்று வாழைச்சேனை அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு (கோறளைப்பற்று வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம், வீதி நாடகம் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தவிர,பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.மேலும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய வளர்நிலா சிறுவர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதியாக 12.00 மணியளவில் நன்றியுரையுடன் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

 

c3  c4  c7  c8

    

Scroll To Top