News & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
மூக்கு கண்ணாடி விநியோகம் – கோறளைப்பற்று வாழைச்சேனை - 2024
மூக்கு கண்ணாடி விநியோகம் – கோறளைப்பற்று வாழைச்சேனை - 2024
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் Helpage Srilanka Mobile Service இன் அனுசரணையுடன் இணைந்து 06.07.2024 அன்று நடாத்தப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்றோர்களுக்கான கண் பரிசோதனை முகாமில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான மூக்கு கண்ணாடி விநியோகமானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இன்று(20) இடம்பெற்றது. இதில் K.H. LalIndrasri (Lanka Helpage) அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். மேலும் தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 95 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி விநியோகம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-02) - 2024
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறி (கட்டம்-02) - 2024
கோறளைப்பற்று பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் சிங்கள கலாசார விழாவானது போதனாசிரியர் M.M. செய்னுதீன் அவர்களின் தலைமையில் 25.05.2024 (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களும், சிறப்பு அதிதியாக வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி லசந்த பண்டார அவர்களும் கலந்து கொண்டனர். மேலும், R.கங்காதரன் - உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார்-நிருவாக உத்தியோகத்தர், திரு.J.ஜோர்ச்-கணக்காளர்,ஆசிரியர் ஆலோசகர்கள்,அதிபர், இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியின் அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிங்கள கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பாடல், நடனம், பாடலுடன் கூடிய நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய சகல உத்தியோகத்தர்களும் சிங்கள கலாசார ஆடையணிந்து, சிங்கள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

“போதைப் பொருள் ஒழிப்பு ” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் - கோறளைப்பற்று வாழைச்சேனை-2024
"போதைப் பொருள் ஒழிப்பு ” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கல் - கோறளைப்பற்று வாழைச்சேனை-2024
போதைப் பொருள் தடுப்பு மாதத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “போதைப் பொருள் ஒழிப்பு"தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் இன்று (15.05.2024) பொது இடங்களில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை- 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு
கோறளைப்பற்று வாழைச்சேனை- 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 09.04.2024 காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், திரு.J.ஜோர்ச் (கணக்காளர்), திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாகஉத்தியோகத்தர்), பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பட்டிமன்றம், நடனம், பாடல், வில்லுப்பாட்டு போன்றவை இடம்பெற்றதுடன் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களான பெண்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

















