News & Events

21
Oct2026
சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் தின விழா...

21
Oct2026
நவராத்திரி விழா 2026

நவராத்திரி விழா 2026

*கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி...

25
Sep2026
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின்...

18
Sep2026
 மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் மூன்றாவது பிரதேச...

உள்விவகாரப்பிரிவு

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில்"உள்ளக விவகாரப் பிரிவு" (Internal Affairs Unit - IAU) செயற்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க சேவைகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான முறையிலும்,காலதாமதமின்றியும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இது இயங்குகின்றது.
 
* சேவைகள் பெறுவதற்கான முக்கிய அறிவுரை
எமது பிரதேச செயலகத்தில் எந்தவொரு சேவையைப் பெறுவதற்கு நீங்கள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை மாத்திரம் செலுத்தி சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதைத்தவிர்த்து வேறு எந்த கொடுப்பனவோ இலஞ்சமோ அன்பளிப்போ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
*எந்தெந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் புகாரளிக்கலாம்?
1. பிரதேச செயலகச் சேவையைப் பெற அதிகாரிகள் யாராவது இலஞ்சம் அல்லது அன்பளிப்பு கோரினால்.
2.நியாயமான காரணங்களின்றி நீண்டகாலம் தாமதம் எற்படுத்தப்பட்டால்.
3. பொதுமக்களை அதிகாரிகள் அநாகரீகமாக நடத்தினால்.
4. ஒமுக்கநெறி மீறல்களில் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால்.
* நீங்கள் புகாரளிக்கக்கூடிய முறைகள்
1. நேரடியாக- எமது பிரதேச செயலக IAU அலுவலகத்தில் நேரடியாக வந்து முறைப்பாடு அளிக்கலாம்.
2. முறைப்பாட்டு பெட்டி - எமது பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியில் இடலாம்.
3. தொலைபேசி- தொலைபேசி மூலம் தகவல் / முறைப்பாடு அளிக்கலாம்.
4. WhatsApp- WhatsApp மூலம் தகவல் / முறைப்பாடு அனுப்பலாம்.
5. மின்ஞ்சல் (Email)- மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
6. QR Code- QR Code ஐ ஸ்கேன் செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
7. இணையதளம்- அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைன் புகார் அளிக்கலாம்.
8. கடிதம் / தபால்- கடிதம் மூலம் தபால் வழியாக புகார் அனுப்பலாம்.

                                                     

Scroll To Top