கோறளைப்பற்று வாழைச்சேனை- பிரதேச இலக்கிய விழா-2023

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2023.12.01 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி. அமலினி கார்த்தீபன்- (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன்- (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்),  திரு.ஜோர்ச்-(கணக்காளர்), திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாக உத்தியோகத்தர்), திருமதி.புனிதவதி ஆனந்தன்-(மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.S.ரவிச்சந்திரன் (பதவி நிலை முகாமைத்துவ உத்தியோகத்தர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மூத்த கலைஞராக சபாபதி கந்தசாமி ஐயா அவர்களும், இளங் கலைஞராக திருமதி.கிருஷாந்த் விமலாதேவி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்,  அபிநயம் நடனக் கலை மன்றம், பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம், வித்யாரணி கலைமன்றம் ஆகிய மன்றங்களின் மூலம்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாடல்,பேச்சு,கவிதை,கதை கூறல், குழுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.  மேலும், கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக பலர் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். இறுதியில் கலைநிகழ்ச்சிகளை நடாத்திய மாணவச் செல்வங்களுக்கும், கலை மேம்பாட்டு சாதனையாளர்களுக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நன்றியுரையுடன்  இந் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

 

PIC 06  PIC 07  PIC 03  PIC 04  PIC 05 

     

 

கோறளைப்பற்று  வாழைச்சேனை - உலக சிறுவர் தினம்   2023

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 01.11.2023  காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான “எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக உலக சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் (கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை) அவர்கள் கலந்து கொண்டார். மேலும் திரு.M.S.மதன் (சுகாதார வைத்திய அத்தியஸ்தர், ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை), திரு. S.M.L.R பண்டார (நிலைய பொறுப்பதிகாரி,பொலிஸ் நிலையம்,வாழைச்சேனை), திரு. S.நவநீதன்(செயலாளர் - கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபை) திரு. MM.அப்துல் றவுப் (நன்நடத்தை பொறுப்பதிகாரி, நன்நடத்தை அலுவலகம்,வாழைச்சேனை) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாகஉத்தியோகத்தர்) திருமதி.க.தேவமனோகரி (சமுர்த்தி தலைமை முகாமையாளர்), திரு.R.பிரேம்சந்திர (முகாமையாளர், இலங்கை வங்கி வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் உலக தரிசனம் வாழைச்சேனை, ஹானியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகர் வாழைச்சேனை, செரி நிறுவனம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கோறளைப்பற்று வாழைச்சேனை அலுவலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு (கோறளைப்பற்று வாழைச்சேனை) ஆகியோர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம், வீதி நாடகம் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தவிர,பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.மேலும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய வளர்நிலா சிறுவர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதியாக 12.00 மணியளவில் நன்றியுரையுடன் இந்நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

 

c3  c4  c7  c8

    

 

கோறளைப்பற்று வாழைச்சேனை - வாணி விழா - 2023

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் வாணி விழாவானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 24.10.2023 அன்று 9.30 மணியளவில் தொடங்கியது. இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்க‌ள், அலுவலக உத்தியோகத்தர்க‌ள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன.

 

v02  v03  v04  v04 copy

கோறளைப்பற்று வாழைச்சேனை-சிறுவர் தினம்-2023

cccc 01c

“பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்  வழங்கல் - கோறளைப்பற்று  வாழைச்சேனை-2023

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் “பிள்ளைகளை காப்பாற்றுங்கள் ’’ தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்  இன்று (02.10.2023) பொது இடங்களில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கோறளைப்பற்று  பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

CH1  CH2  CH4  CH6

 

    

Scroll To Top