






*நவராத்திரி விழா- 2025*
எமது பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா நிகழ்வானது இன்று (02.10.2025) வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமானது. உதவிப்பிரதேச செயலாளர் திருமதி டிலக்சினி சசிதரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் ஏனைய உத்தியோகத்தர்கள், ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்போர் கலந்து கொண்டனர். நந்திக்கொடி கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அடுத்ததாக மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனை அடுத்து ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்களால் ஆசியுரை இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவிகளினால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் அவர்களினால் தலைமையுரை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களினால் பேச்சு, பஜனை, வில்லுப்பாட்டு என்பன இடம்பெற்று இறுதியாக நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது பூஜை வழிபாடுகளுடன் பி.ப 1.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.





















