News & Events

21
Oct2026
சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

சிறுவர் தின விழா மற்றும் ஆய்வு நூல் வெளியீடும் - 2026

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் தின விழா...

21
Oct2026
நவராத்திரி விழா 2026

நவராத்திரி விழா 2026

*கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி...

25
Sep2026
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

கோறளைப்பற்று வாழைச்சேனை, பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டின்...

18
Sep2026
 மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் மூன்றாவது பிரதேச...

பிரதேச இலக்கிய விழா-2022

 

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை மற்றும் அதிகார சபையும் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான பிரதேச இலக்கிய விழாவானது 2022.10.13 (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் திருமதி.அமலினி கார்த்தீபன் (உதவிப் பிரதேச செயலாளர்), திரு.R.கங்காதரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.R.சசிக்குமார் (மேலதிக மாவட்டப் பதிவாளர்), திரு.ஜோர்ச் (கணக்காளர்), திரு.R.பாஸ்கரன் (நிருவாக உத்தியோகத்தர்) திரு.சி.முருகவேல் (பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர்), பிரதேச கலை இலக்கிய சாதனையாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும்  அபிநயம் நடனக் கலை மன்றம்,பாரதி மேம்பாட்டுக் கழகம், சன் கலைமன்றம், அண்ணா கலை மன்றம் ஆகிய மன்றங்களின் மூலம்  கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. திரு.கணபதிப்பிள்ளை யோகராசா அவர்கள் நடனம், நாடகக் கலைக்காகவும், திரு.சுரேந்திரன் டிலக்சன் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் இந் நிகழ்வுகள் யாவும் 11.30 மணியளவில் நிறைவுபெற்றன.

Scroll To Top