கோறளைப்பற்று பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும், சேவைநலன் பாராட்டு விழாவும்-2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவானது கடந்த 07.01.2023 அன்று நாசிவன்தீவு தனியார் வாடிவீட்டில் காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களும்,ஓய்வு பெற்றுச்சென்றவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்தவகையில்,இடமாற்றம் பெற்றுச் சென்று தற்போது வாகரை பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமைபுரியும் திருமதி.சந்திரகலா ஜெயந்திரா, சமுர்த்தி முகாமையாளர் திரு.நல்லரெத்தினம் விஜிதரன், திருமதி. H.M.பாத்திமா மிஸ்னா, திருமதி.WT.அரிசியாஉம்மா, திருமதி.பவளகாந்தினி இலங்கேஸ்வரன், திரு.கந்தையா இதயராஜா, ஜனாப்.ஆபுபக்கர் நாஸர், ஓய்வு பெற்று சென்ற யமுனா சிவலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு அவர்களுக்கான நினைவுச் சின்னங்களுடன் அவர்கள் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதேச செயலாளரின் உரையானது இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்று சென்றவர்களின் மக்கள் சேவையினை பாராட்டும் முகமகவும்,அவர்களை மேலும் ஊக்குவிக்கும் முகமகவும் அமையப்பெற்றது. மேலும் அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளும்,வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இந்நிகழ்வினை அலங்கரிப்பவனாக அமையப்பெற்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.










