கோறளைப்பற்று வாழைச்சேனை- ஒளி விழா 2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒளி விழாவானது 20.12.2022 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட்பணி.S.இக்னேசியஸ் அடிகளார், அருட்பணி. K.ஸ்டீபன் நிஷாந்த அடிகளார், வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர். அதிதிகளை வரவேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திரு.J.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திரு.R.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.R.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.K.தேவமனோகரி, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இயேசு பாலன் பிறந்த தினத்தை நினைவூட்டும் வகையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பல நடனங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.










