கோறளைப்பற்று வாழைச்சேனை - தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை

 

கோறளைப்பற்று  வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 12/10/2022 (புதன் கிழமை) காலை 8.30 மணி தொடக்கம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  நலன்கருதி FPA- SUWESEWA CENTER(Batticaloa)-சுகாதார சேவை நிலைய அனுசரணையுடனும், வாழைச்சேனை- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடனும், சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி திரு.DR.ஸ்டீவ் சஞ்சீவ் அவர்களின் தலைமையில் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை இடம்பெற்றது.மேலும் FPA-SUWESEWA CENTER(Batticaloa)-சுகாதார சேவை நிலைய குடும்பத்திட்டமிடல் அலகுடன், வாழைச்சேனை- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களும் இணைந்து குடும்பத்திட்டமிடல் தொடர்பான ஆலோசனைகளை வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கினர். இச் சேவைகள் அனைத்தும் இலவசமான முறையிலேயே வழங்கப்பட்டது.

 

IMG E7519  IMG 7502  IMG 7505  IMG E7501  IMG E7510  IMG E7514IMG E7516  IMG E7518  IMG 7509

Scroll To Top