இலங்கை ஜனநாயக குடியரசின் 74 வது சுதந்திர தினம் - 2022
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 74 வது சுதந்திர தின நிகழ்வானது இன்று பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது .
சுற்றுநிருபத்திற்கமைய தேசிய கொடியானது காலை 8.19 மணிக்கு பிரதேச செயலாளரினால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது .
மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது . பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்திபன் அவர்களால் விசேட உரை நிகழ்த்தபட்டது . இதில் அதி மேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தேசிய கொள்கைத்திட்டதிற்கமைய
- பயன்தரு மரங்களை நடுதல் / பாதுகாத்தல்
- தடை செய்யப்பட்ட தாவரங்களை அகற்றல் .
- நஞ்சற்ற உணவு உற்பத்தி மற்றும் மேம்பாடு
போன்றவை தொடர்பில் வலியுறுத்தப்பட்டது .
அதனைத்தொடர்ந்து செல்வி . ச . சரநிலா என்னும் மாணவியால் (மட்/ககு/நாமகல் வித்தியாலயம் ) நிலைபேறான அபிவிருத்தியும் இன ஒற்றுமையும் என்னும் தலைப்பில் உரையாற்றப்பட்டது . அதனைத் தொடர்ந்து பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது .
மேலும் 13 பொது மக்களுக்கு காணி உறுதிப் மதிபத்திரம் வழங்கப்பட்டதுடன் , அலுவலக வளாகத்தில் பயன் தரு மரக் கன்றுகள் அலுவலக பதவி நிலை உத்தியோகத்தர்களால் நடப்பட்டது . தொடர்ந்து அலுவலக வளாகத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் R. கங்காதரன் , நிருவாக உத்தியோகத்தர் R. பாஸ்கரன் , மேலதிக மாவட்ட பதிவாளர் R. சசிகுமார் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி தேவ மனோகரி பாஸ்கரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர் .

















