கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.
===========================================================================================
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (17.09.2026) இன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Dr.இளையதம்பி சிறிநாத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு ராஜரெட்ணம் கங்காதரன், திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மௌன இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையானது பிரதேச செயலாளர் திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களால் நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் கூட்டறிக்கையானது அங்கிகரிக்கப்பட்டு, சென்ற கூட்டத்தின் மீளாய்வு இடம்பெற்றது. ஒவ்வொரு திணைக்களங்களிலும் தற்போது கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டன. எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில்பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பிரதேச மட்ட சவால்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், எதிர்கால திட்டங்களை விரைவுபடுத்த பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அத்துடன் எல்நினோ தாக்கம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களால் உரிய அதிகாரிகலுடன் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டமானது பி.ப 2.00 மணி அளவில் இனிதே நிறைவடைந்தது.











