கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு
கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் வலையமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மகளிர் தினமானது பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 12.03.2025 காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், கணக்காளர் திருமதி. தயானி சசிகுமார், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி. திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர் திருமதி.க.தேவமனோகரி அவர்கள், GIZ ஆலோசகர், ESCO நிறுவன பணிப்பாளர்,பெண்கள் வலையமைப்பின் வளவாளர், வாழைச்சேனை சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்,டில்மா அறக்கட்டளை நிதிய முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாடகம், நடனம், பாடல் போன்றவை இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வானது GIZ,ESCO ஆகியவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.













