“விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்”- கோறளைப்பற்று வாழைச்சேனை  - 2023

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 16.05.2023 அன்று காலை 9.00 மணிமுதல் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நாடு பூராகவும் மிகவும் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடனான இச் சிரமதான நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களது பங்களிப்பினை வழங்கினர். மேலும் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இச் சிரமதான வேலைத்திட்டமானது கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

 

WhatsApp Image 2023 05 17 at 21.56.24  kv ed  kv2 ed     

Scroll To Top