கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2023
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (18.04.2023) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. பிரதேச செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன்(கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள், கௌரவ இரா.சாணக்கியன்(பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.














