கோறளைப்பற்று வாழைச்சேனை - இரத்ததான நிகழ்வு
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி கேட்டதிற்கமைவாக 25.01.2023 அன்று காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மனித உயிர்களைக்காக்கும் இம் மாண்புமிகு குருதிக்கொடை நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள்,கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பொது மக்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தின் சமூக நலன்புரி அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து தமது பங்களிப்பினை வழங்கும் முகமாக தமது பெறுமதி வாய்ந்த இரத்தத்தினை தானமாக வழங்கினர். அந்தவகையில் 64 குருதிகொடையாளிகளுக்கும் அதிகமானவர்கள் தமது இரத்தத்தினை தானமாக வழங்கினர்.













