மட்டு முயற்சியாண்மை கோறளைப்பற்று பிரதேச மட்ட கண்காட்சி- 2022

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில்  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.அமலினி கார்த்தீபன் அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுதொழில்  முயற்சி அபிவிருத்தி பிரிவு  நடாத்தும் “மட்டு முயற்சியாண்மை-2022” - உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச  மட்ட  விற்பனை கண்காட்சியானது   23.11.2022  (புதன்கிழமை)  மு.ப 9.00  தொடக்கம்  பி.ப 4.00  மணிவரை இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய  இந்நிகழ்வில் திரு.R.கங்காதரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்), திரு.R.பாஸ்கரன் (நிருவாக உத்தியோகத்தர்), திருமதி K.தேவமனோகரி (சமுர்த்தி தலைமையக முகாமையாளர்), திரு.S.ஜெயசேகர் (சமூகசேவை உத்தியோகத்தர்), திரு.T.நிலோசன் (மேற்பார்வை உத்தியோகத்தர் - சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு), திரு.S.அகிலகுமார் (சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்), திருமதி.K.சாலினி (சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந் நிகழ்வு அமையப்பெற்றது வரவேற்கத்தக்கதாகும்.

00000  F25  F23  F22  F5  F21  F24    F3  F8  F12  F9  F11  F7  F15  F14  F26  F16

Scroll To Top