பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - 2022.01.25
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 2022ம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 25.01.2022 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காக 77 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வமர்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோறளைப்பற்று பிரிவில் இவ்வருடத்தில் அமுல்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் ஆராயப்பட்டது.
மேலும் புதிய வேலைத்திட்டங்களுக்குமான அனுமதி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை தவிசாளர் கௌரவ சோபா ஜெயரஞ்சித் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














