மட்டக்களப்பில் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயணத் தலம்" கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - கோறளைப்பற்று வாழைச்சேனை

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) காலை 8.00 மணிக்கு நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரை பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாசிக்குடா கடற்கரையில் இருந்து இரண்டு அணிகளாக பிரிந்து மேற்கூறப்பட்ட இடங்களை சுத்தம் செய்தனர். மேலும் இந் நிகழ்வானது பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலகர்கள், சுற்றுலா விடுதி ஊழியர்கள், கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகங்கள், மீனவர் சங்கத்தினர், இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உதவியாளர்   ஆகியோரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் கடற்கரையோரங்களில் அதிகளவில் காணப்பட்ட பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Scroll To Top