கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது 13.02.2025 அன்று 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் கௌரவ க.பிரபு (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்) அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், கௌரவ இ.சிறிநாத் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள்,கௌரவ ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், கௌரவ எம்.எஸ் நலீம் (பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு) அவர்கள், திரு.ஜி.திலிப்குமார் (இணைப்பாளர்) அவர்கள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆர்.கங்காதரன் அவர்கள், பிரதேச செயலக கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் கடந்த வருடம் இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், Clean Srilanka வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றன.மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.














