கோறளைப்பற்று வாழைச்சேனை- 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது  இன்று (01.01.2025)  காலை 8.30  மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன் அவர்கள், கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் அவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார் அவர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி.புனிதவதி பாலகிருஷ்ணா அவர்கள் மற்றும் அலுவலக உள்ளக,வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் நாளினை  வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும்  பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால்  தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட  மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள்  “Clean Srilanka’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கு அமைவாக வளமான நாட்டையும் அழகான வாழ்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன்  செயலாற்றும் செயன்முறையொன்றுக்கான அடிப்படையொன்றை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும், நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினார்.  மேலும் இவ்வருட இறுதியில் ஓய்வூதியம் பெற்றுசெல்பவர்களுக்கான கௌரவிப்பும், அவர்களது அலுவலக அனுபவ பகிர்வும் இடம்பெற்றது. இறுதியாக, நன்றியறிதலுடன் பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

IMG 20250101 WA0127  IMG 20250101 WA0124  IMG 20250101 WA0116 1  IMG 20250101 WA0110  IMG 20250101 WA0115  IMG 20250101 WA0113  IMG 20250101 WA0108

Scroll To Top