கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.12.19 அன்று மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.
மங்கல விளக்கேற்றளுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம அதிதி அருட்தந்தை அண்டனி டெலிமா(Parish Priest st Theresa's Church)அவர்களின் அதிதி உரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் கரோல் கீதம், பாடல், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நத்தார் தாத்தா வருகை மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.அதனைத்தொ டர்ந்து இலக்கிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள்,பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.














