கோறளைப்பற்று வாழைச்சேனை- 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின  நிகழ்வு

 

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் 09.04.2024   காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில்  2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.R.கங்காதரன், திரு.J.ஜோர்ச் (கணக்காளர்), திருமதி. புனிதநாயகி ஜெயக்குமார் (நிருவாகஉத்தியோகத்தர்),  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான  திருமதி.ஜஸ்டீனா யுலேக்கா முரளிதரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பட்டிமன்றம், நடனம், பாடல், வில்லுப்பாட்டு போன்றவை இடம்பெற்றதுடன் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களான   பெண்களை கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

WhatsApp Image 2024 04 09 at 8.31.56 AM  WhatsApp Image 2024 04 09 at 8.58.27 AM  WhatsApp Image 2024 04 09 at 8.31.52 AM  

 

 

Scroll To Top