தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட Citizen Mirror பிரதேச உற்பத்தித்திறன் சுட்டி 1.0 எனும் போட்டியில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் AAA எனும் தரச் சான்றிதழினை பெற்றுள்ளது.
மாவட்ட ரீதியாக பார்க்கும் போது 4ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியாக 16வது இடத்தினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு பிரதேசசெயலத்தில் இயங்கும் பிரதான கிளைகள் மற்றும் சகல வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட இரு கருத்திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமை முக்கிய விடயமாகும்.
இவ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அம்மணிக்கும், முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்சி சசிகுமார் அம்மணிக்கும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மேலதிக மாவட்ட பதிவாளர் உட்பட அனைத்து அலகு தலைவர்கள் கிளை அலகு உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.













