“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளுடன்
2026 ஆம் ஆண்டின் முதல் நாள் கடமைகளைப்பெறுப்பேற்றல் நிகழ்வு.
எமது பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாள் (01.01.2026) கடமைகளைப்பெறுப்பேற்றல் நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. பால் பொங்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் தேசியக்கொடியானது எமது பிரதேச செயலாளரினால் ஏற்றிவைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முப்படைகள் மற்றும் நாட்டிக்காக உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சகல உத்தியோகத்தரினாலும் சத்தியப்பிரமாணம் சத்தமாக வாசிக்கப்பட்டது. பிரதேச செயலாளரினால் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் அதில் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தல் பற்றி சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்றவருடம் கோறளைப்பற்று பிரதேசசபையினால் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்ட எமது பிரதேச செயலக கிரிகெட் அணியினர் பிரதேச செயலாளரினால் கெளரவிக்கப்பட்டு அவர்களுக்கான கிண்ணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















