** பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் **
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது 30.10.2025 இன்று மு.ப 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கௌரவ பாரளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் ஆரம்பமானது. இதில் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாரளுமன்ற உறுப்பினரகளான இராசமாணிக்கம் சாணக்கியன், டாக்டர் இளையதம்பி ஸ்ரீநாத், பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்சினி சசிதரன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜேந்திரன் கங்காதரன், பிரதேச சபை தவிசாளர், திணைக்களப்பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பிரதேச செயலாளரின் ஆரம்ப உரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் முன்னைய பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் கூட்டறிக்கையானது முன்மொழிந்து வழிமொழியப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதித்திட்டமிடல் பணிப்பாளரினால் இவ்வருடத்தில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவினம் அதன் பௌதீக மற்றும் நிதி ரீதியான அளவுகளின் சதவீதம் என்பவை எடுத்துக்கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு திணைக்களங்களின் பிரதிநிதிகளினால்; அவர்களது திணைக்களங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கைகள் என்பன முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரினாலும் ஏனைய உறுப்பினர்களாலும் முன்மொழியப்பட்டன. இக்கூட்டமானது பி.ப 12.45 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.














