சிரமதான நிகழ்வுகள்- கோறளைப்பற்று  வாழைச்சேனை-2023

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் Plastics and Polythene Free Zone என்ற தொனிப்பொருளின் கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கல்மடு கிராமசேவகர் பிரிவு, கல்குடா கிராமசேவகர் பிரிவின் வலவாடி கடற்கரைப் பிரதேசத்தில் முறையே 14.06.2023,15.06.2023 சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இச் சிரமதான நிகழ்வானது பிரதேச செயலாளர், உதவி பிரதேச  செயலாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர் (CCD)  ஆகியோரின் வழிகாட்டலுக்கமைவாக, கரையோர மூல வள திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரின் பங்களிப்புடன் கல்மடு பிரதேசத்தில் கல்மடு மீனவர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடனும், கல்குடா பிரதேசத்தின் வலவாடி மீள்குடியேற்ற சிங்கள குடும்பங்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கமைவாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இழுவை இயந்திரம் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடதக்கவிடயமாகும்.

 

IMG 20230615 WA0009  IMG 20230615 WA0011  IMG 20230615 WA0012  IMG 20230615 WA0000 1

Scroll To Top