Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Pasikudah Tourism
JA slide show

எங்களைப் பற்றி

எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினுடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாய  மொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வழங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயல் திறன் மிக்கதும் பயனுறுதி மிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.

 

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பின்னனி

எமது  கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலுள்ள ஓர் பிரதேச செயலகமாகும். எமது செயலகப் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளது. பொலநறுவை அல்லது மட்டக்களப்பு  A- 15   பிரதான வீதியின் அருகில் வாழைச்சேனையில் எமது செயலகம் அமைந்துள்ளது. கொழும்பு மாநகரின் கிழக்கு நோக்கிய 303 கி.மீ. தூரத்திலும், திருகோணமலை நகரின் தெற்கே 138 கி.மீ. தூரத்திலும், மட்டக்களப்பு மாநகரின் வடக்கே 32 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

gggggggggggggggggggg

எல்லைகள்

வடக்கு           -    கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவு
கிழக்கு            -    வங்கால விரிகுடா வாழைச்சேனை
தெற்கு            -    கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு
மேற்கு            -    கோறளைப்பற்று மத்தி

நிலம்


முல்லை மருதம் நெய்தல் ஆகிய அமைப்பை கொண்டது இப் பிரதேச செயலக விஸ்திரணம் 45.07 சதுர கி.மீ பரப்பளவாக உள்ளதுடன் கல்சியமற்ற   கபில நிற மண் வளத்துடன் அமைந்து காணப்படுகிறது

 

காலநிலை


சராசரி மழை வீழ்ச்ச்சி 19.90 மி.மீ வெப்பநிலை 25-35.4' செல்சியஸ்

 

மக்கள்

இந்து  கிறிஸ்தவம்  ஆகிய மதத்தை பின்பற்றும் மக்கள். இப்பிரிவிற்குரிய மொத்தமாக  சனத்தொகை 23730 ஆக காணப்படுகின்றது. அதில் 7204 குடும்பங்கள் காணப்படுகின்றன.

 

பிரதான தொழில்

இப்பிரிவு மக்களின் பிரதான தொழில்களாக மீன்பிடி விவசாயம் காணப்படுகிறது

 

வாழ்க்கைநிலை


சுமார் 65% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 23 ஜூலை 2015 05:44)

 
செய்திகள்/நிகழ்வுகள்